| வந்தாரே வெகுநாட்கள் தான்கழித்து வளமையுடன் மைந்தனையும் பெற்றபின்பு சிந்தனைகள் தாம்நீங்கி கலியும்நீங்கி சிற்பரனைப்போல ஒருபாலன்பெற்று பந்தமுடன் மணவாளன் மனைவிதானும் பட்சமுடன் மைந்தனையுங் கொஞ்சியல்லோ அந்தவுலகத்தினிலே சத்தகன்னி எழிலான குறிப்போலே யுண்டென்பாரே |