| சொல்லவென்றால் பாம்பாட்டி மர்மந்தானும் தோற்றமுடன் ஜோகியென்ற வம்மிஷந்தான் புல்லவே மசானகுறி யோகியப்பா புகடிநபெரிய குருடனார் பெற்றபிள்ளை வெல்லவே மாலைசுற்றித் தான்பிறந்த வேதாந்தப் பாம்பாட்டி யென்னலாகும் நல்லதொரு சித்துமுனி உபதேசங்கள் நலம்பெற்ற பாம்பாட்டியாமே |