| தானான பாம்பாட்டி பிறந்தமாதம் தாக்கான கார்த்திகையாந் திங்களப்பா கோனான மிருகசீரிடந்தானாகும் கொற்றவனே மூன்றாங்கால் என்னலாகும் தேனான அவர்பிறந்த நாள்தானப்பா தேசத்தில் சித்தர்முனி கண்டதுண்டோ மானான பதினெண்பேர் நூலைப்பார்த்து மார்க்கமுடன் தானறிந்து சொல்லிட்டேனே |