| பாரேதான் சித்தொளியின் மகிமைபாரு பாங்கான காலாங்கி பாட்டன்வர்க்கம் நேரேதான் வம்மிஷத்திற் பிறந்தசித்து நெடிதான சின்மயானந்தசித்து வேரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வெளியரங்கமானதொரு மாராகேண்மோ சீரேதான் அறிவான அனந்தசித்தர் தீர்க்கமுடன் பிறந்ததொரு நேர்மைகாணே |