| சித்திரையாம் அசுவினி மூன்றாங்காலாம் சிறப்பான நாள்தனிலே பிறந்தாரென்றும் பத்தியுடன் அவருடைய மார்க்கஞ் சொல்வேன் பண்பான திரணாக்கிய முனிவர்பேரன் முத்திவழி செல்லுகின்ற சித்துவாகும் முனையான வரரிஷியாமென்றும்பேரு சத்தியங்கள் தவறாத விசுவயோகி தாரணியில் வரரிஷியாமென்னலாமே |