| சித்தான குலசம்பிரதாயபூபன் சிறப்பான தட்சணாமூர்த்திநாயன் முத்தான யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் மூதுலகைக் கடந்ததொரு புனிதனாகும் புத்தியுள்ள கோரக்கர் பிறந்தநேர்மை பண்பான கார்த்திகையாமென்னலாகும் சித்திபெற அயலிடமாம் இரண்டாங்கால்தான் சிறப்பான நாளென்றே சொல்லலாமே |