| பாலனாஞ் சிங்களவ தேவதாசி பட்சமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டமுனி என்றுசொல்லி சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு கோலமுடன் யின்னமொரு மார்க்கம்பாரு கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு தாலமுடன் இடைக்காடர் பிறந்தநேர்மை சட்டமுடன் சொல்லுகிறேன் தண்மைபாரே |