| சேரவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் செம்மலுடன் புலிப்பாணி மைந்தாகேளு வாரமுடன் சண்டீசுவரர் வளமைகேளும் வண்மையுடன் வயததுவும் ஏதென்றாக்கால் தீரமுடன் நானூற்றியறுபதாகும் தீர்க்கமுடன் அவர்நூலில் சொன்னநீதி சாரமுடன் சமாதிமுகஞ் சென்றசித்து சாங்கமுடன் வையகத்து சித்துகாணே |