| போற்றுவார் பூதலத்தார் எல்லாருந்தான் பொங்கமுடன் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் தேற்றமுடன் வால்மீகர் என்றசித்து தெளிவான மார்க்கமது சொல்வேன்பாரீர் மாற்றமயம் நீங்கியல்லோ வையகத்தில் வளமையுடன் வெகுகாலமிருந்த சித்து ஆற்றலுடன் வால்மீகர் ராமாயணத்தை அவனிதனில் மாந்தருக்கு செடீநுதிட்டாரே |