| உண்மையாங் குளிகையது தானுமில்லை வுத்தமனே நரைதிரையும் யாதொன்றில்லை வண்மையாம் பிணியென்ற ரோகமில்லை வகுப்பான காயாதிதானுமில்லை தண்மையுடன் வையகத்து மாண்பரெல்லாம் தப்பாமல் சிவயோகி என்பார்பாரு திண்மையுடன் கோரக்கர் மூலிதம்மை தீர்க்கமுடன் எப்போதும் தின்பார்தானே |