| பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாங்கான பாலகனே பகரக்கேளு நீரேதான் கோரக்கர் வயதேதென்றாக்கால் நிஷ்களங்கமாகவல்லோ மாயாசித்து சேரேதான் வயததுவும் எண்பதாகும் செப்பினார் அவர்நூலில் சூத்திரந்தான் சீரேதான் பதினாறு சூத்திரத்தில் சிறப்பாகப் பாடிவைத்த துண்மையாமே |