| சென்றாரே நற்மதா நதியின்பக்கல் சிறப்புடனே தட்சணாமூர்த்திநாயர் குன்றான கரையோரம் மண்டபந்தான் கொற்றவனார் சமாதிமுகஞ் சென்றுமல்லோ வென்றிடவே ஒருயுகமாம் அறுபதாண்டு வுத்தமனார் தானிருந்துவந்தசித்து தென்றிசையில் தட்சணாமூர்த்தி யென்று தேசமதில் பேர்கொண்ட சித்துபாரே |