| ஆமப்பா புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் போமப்பா நந்தியுட மார்க்கந்தன்னை புகலுகிறேன் வயததுவும் ஏதென்றாக்கால் நாமப்பா வயததுவும் எழுநூறாண்டு நலமான வெகுகால மிருந்தசித்து வேரப்பா சமாதிமுகங் கண்டசித்து வேதாந்த நந்தியென்று சொல்லலாச்சே |