| சென்றதொரு சித்துமுனி மார்க்கங்கேளு செயலான புண்ணாக்கு ஈசரப்பா தென்றிடவே வயததுதான் நூற்றிரண்டுபத்து விருப்பமுடன் மரப்பொந்தில் இருந்தசித்து குன்றுமலை குளிகையதுயனியாச்சித்து கோபாலா கோபாலா வென்னுஞ்சித்து தென்றிசையில் வடகோடி கானகத்தில் திருவாத்தின் மரத்தின்மேலிருந்தசித்தே |