| பகருவேன் அகஸ்தியருக்கு வயதேதென்றால் பட்சமுடன் துகைகணக்குக் கூறொண்ணாது நிகரமுடன் சொல்வதற்கு யாராலாகும் நீதியுடன் நூல்தனிலே யுரைத்தமார்க்கம் அகரமென்ற வட்சரமும் அவராலாச்சு வப்பனே நாலுயுகங் கடந்தசித்து சகரமெலாந் தான்துதிக்கும் கும்பயோனி சதுரான வகத்தியர் என்றமையலாமே |