| பாண்மையாம் யாக்கோபு மரபேதென்றால் பாங்கான குலம்விட்டு குலம்புகுந்தோர் மேன்மையாம் முன்சொன்ன ராமதேவர் மெடீநுயான குலமென்றே சொல்லலாகும் தேன்மாரி பொழிகின்ற மச்சுதேசம் சென்றல்லோ பெயர்மாறி வுருவுகொண்டார் வான்மீது வறுந்துதிபோல் உதிக்குந்தீரன் மகத்தான ராமதேவர் என்னலாமே |