| அறியவே புண்ணாக்கரீசர்தாமும் அவருடைய ஜாதிபேதங்கள் சொல்வேன் நெறியான கன்னடிய ஜாதியாகும் நேர்பான தலைமுறைகள் ஏதென்றாக்கால் குறியான பதினெட்டு தலைமுறைதானாகும் குறிப்பான சாத்திரத்தில் சொன்னவாறு முறியான சித்தர்மகா ரிஷிகள்நூலில் முறைபாடு சிலபேர்கள் சொல்லாரன்றே |