| முனியான என்பாட்டன் அகஸ்தியர்தாமும் முனையான காலாங்கி நாதர்தாமும் சொனைபோலே சாத்திரங்கள் எனக்குரைத்தார் தோற்றமுடன் பிரகாசமானசித்து மனைதோறும் சாத்திரவேதாகமங்கள் மார்க்கமுடன் பாடிவைத்தார் பலநூல்சித்தர் வினையாலே மாண்டதொரு மாண்பருக்கு விரிவான அதர்வணங்கள் சொல்லார்காணே |