| உரைத்தேனே ஏழாயிர சத்தகாண்டம் வுற்பனமும் விற்பனமும் மெத்தவுண்டு நிரைத்தேனே யாறாவது காண்டத்துள்ளே நேர்மையுடன் அதர்வணத்தைக் கூறினேன்யான் விரைத்ததொரு பொருளெல்லாம் இதிலடக்கம் விருப்பமுடன் பாடிவைத்த சத்தகாண்டம் குரைத்த தொருபொருளெல்லாம் எந்தனாயர் குருமுனியாம் அகஸ்தியத்தில் காணலாமே |