| சேர்த்துமே லலாடமதிலிட்டு மைந்தா செம்மலுடன் அம்மென்று கும்பித்துமல்லோ ஆர்த்துமே பிரணவத்தை யுச்சாடித்து வன்புடனே லட்சமது வுருவுபோடு கோர்த்துமே வுருவதனால் எல்லாஞ்சித்தி கொற்றவனே சின்மயத்திலிருந்துகொண்டு பார்த்துமே நவகோண பீடந்தன்னில் பக்குவமாடீநு சொரூபநிலை நின்றிடாயே |