| வாதத்தில் ஆதியென்ற சூதக்கட்டு வகைசொல்வேன் பச்சையென்று மயங்கவேண்டாம் நீதத்தில் துரிசியது பலமுமொன்று நேர்ப்பாகப்பொடிபண்ணி வைத்துக்கொண்டு பூதத்தில் இரும்பான கரண்டிதன்னைப் புதுக்கியே தண்ணிர்விட்டுக் கழுவிப்போடு சூதத்தை நிறுத்தல்லோ பலமும்போட்டு சுறுக்குடனே தண்ணீரை முக்கால்வாரே |