| பாரப்பா தூமாதேவி தேவஸ்தானம் பாங்குடனே தோப்பருகில் இருக்கக்கண்டேன் நேரப்பா கன்னிகளோ வாயிரம்பேர் நேர்மையுடன் பச்சைபல்லாக்குகொண்டு சீரப்பா தூமாதேவி தன்னைத்தானும் சிறப்புடனே பல்லாக்கு சாரிகொண்டு ஊரப்பா காவனத்தை சுற்றியல்லோ வுத்தமனே கன்னிகளும் வருவார்தாமே |