| இருக்கவென்றால் மணியென்ற கருவொன்றுண்டு எழிலான கருவதனைக் கண்டதில்லை திருத்தமுடன் மணியோசைக் கேட்டபோது திகழான மணியொன்று இருக்கும்பாரு பொருத்தமுடன் வையகத்திலதிசயங்கள் பொங்கமுடன் கோடானகோடியுண்டு வருத்தமுடன் பிறப்பதுவும் பிறப்போர்தம்மை வளப்பமுடன் மழைதனையே கண்டிட்டோமே |