| கொண்டதொரு வேந்தனுக்கு இதுகள்வேண்டும் கோடான கோடிபொருள் இருந்துமென்ன அண்டிவந்த யதிதிபரதேசியர்க்கு வன்புடனே கர்ணனைப்போல் யீயவேண்டும் வண்டணிமார் குடிப்படைகள் தன்னைத்தானும் வளமையுடன் கற்பழிக்கலாகாதப்பா சண்டமாருதம்போலே செங்கோல்நாட்டி சதுருடனே யாள்பவனே மன்னனாமே |