| தானான மிருகத்தின் வளப்பஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலும் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தேசமெல்லாம் குளிகையது பூண்டுகொண்டு மானான மிருகத்தின் மகுத்துவத்தை மண்டலத்தில் கண்டறிந்து வந்தேன்பாரே |