| இட்டேனே காலாங்கி சொன்னநீதி எழில்பெறவே புலிப்பாணி மைந்தாகேளு பட்டதொரு படுகளத்தின் மாண்பர்சேதி பாரினிலே விதியினால் மடிந்தோர்சேதி சட்டமுடன் எந்நாயன் காலாங்கிநாதர் சாங்கமுடன் எடுத்துரைத்த தொகையைத்தானும் வட்டமுடன் நபியுரைத்த தோப்புதன்னில் வளமான வையகத்துத் தொகையுந்தானே |