| இருந்தாரே வெகுகாலம் காலாங்கிநாதர் எழிலான வையகத்து மாண்பர்முன்னே பொருந்தவே வதிசயங்களெல்லாங் கண்டார் பொங்கமுடன் இறந்தவர் கணக்குங்கண்டார் திருந்தவே யவர்கண்ட கணிதமப்பா தீர்க்கமுடன் எந்தனுக்கு அருளினார்பார் குருந்தமிழா மாசிரியர் முனிவர்தாமும் கூறவில்லை நூல்தனில் கூறாரின்றே |