| தானான புலிப்பாணி மைந்தாகேளு தண்மையுடன் என்குருவாங் காலாங்கிநாதர் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாங் குளிகைகொண்டு சென்றபோது கோனான குருதனக்கு வயதுசொல்வேன் கொற்றவனே முந்நூற்றப் பதினைந்தாகும் பானான வாண்டுமது வஞ்சேயாகும் பாங்கான வாண்டுக்கு வறுபதாமே |