| பாரப்பா இன்னமொரு கருமானங்கேள் பாலகனே சொல்லுகிறேன் மைந்தாபாரு நேரப்பா வையகத்தில் கோடிவித்தை நேர்மையுடன் கண்டதுண்டு பார்த்தோருண்டு சீரப்பா இதிகாசவித்தையெல்லாம் சிறப்புடனே சித்தர்முனி மறைத்துவைத்தார் ஆரப்பா யெனைப்போலே சொல்வாருண்டோ வப்பனே கண்டவரை வுரைத்திட்டேனே |