| காணவே யெந்தனுக்கு சொன்னாரங்கே கவனமுடன் குளிகைகொண்டு நின்றுமல்லோ தோணவே திடுக்கிட்டு மனதுயேங்கி தொல்லுலகில் துரியோதனன் களந்தானங்கே பூணவே யெந்தனுக்கு சொல்லவென்று புகழாக வடியேனுங் கேட்டேனங்கே ஆணவம் பூண்டதொரு போர்க்கலத்தை யங்ஙனவே எந்தனுக்குக் காண்பித்தாரே |