| பாரேதான் சீனபதிவிட்டுமல்லோ பாங்கான குளிகையது பூண்டுகொண்டு நேரேதான் மலையாளங் குடகுநாடு நேர்மையுடன் வெகுதேசஞ் சுற்றிவந்தேன் சீரேதான் சிங்கணர் கொங்கணவர் தாமும் சிறப்பான மராட்டியப்பரரைக்கண்டேன் கூரேதான் கன்னடையர் மலையாளரப்பா குறிப்பான குசலரவர் வேளாளர்தாமே |