| தானான யின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு கோனான சித்தர்களும் முனிவர்தேவர் குவலயத்தில் கோடிவித்தை வினோதஞ்செடீநுதார் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவான வித்தையெல்லாம் மறைத்துப் போட்டார் மானான வித்தையிது மாந்திரீகவித்தை மன்னவனே கண்மணியே சொல்வேன்பாரே |