| வண்மையாம் புழுகுடனே பூரந்தானும் வளமான ரோஜனையுங் கஸ்தூரிசேர்த்து நண்மையாம் ஆத்மஜலந்தன்னிலாட்டி நலம்பெறவே கழிதனக்கும் பூசியல்லோ திண்மையுடன் சவந்தனையே சுத்திவந்து தீர்கமுடன் சடம்மேகும் சமையந்தன்னில் உண்மையாம் தலைமாடு கால்மாடாக வுத்தமனே நெல்லதனை யுருட்டிடாயே |