| தானான வித்தையது யதிகஞ்சொன்னார் தண்மையுடன் காலாங்கி வித்தைக்கொவ்வா கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொட்டினார் இதுபோல சிடிகைவேதை தேனான மனோன்மணியாள் கிருபையாலே தெரிவித்தே னுந்தனுக்கு சொன்னேனப்பா பானான வித்தையெல்லாங் கூறப்போனால் பாங்கான வேழாயிரம் இடங்கொள்ளாதே |