| கொடுக்கவே பட்சமது மிகவேவைத்து கொப்பெனவே கியாழமது சொல்வேன்கேளிர் அடுத்ததொரு வெண்குன்றி வேரைதானும் அடவான மூலியொடு சமூலங்கூட்டி தொடுத்துமே கூகைநீர் தானுஞ்சேர்த்து துப்புரவாடீநுக் கியாழமது கொடுத்தபோது படுத்ததொரு சுரமதுவும் நான்குநாளாம் பாங்குடனே தீருமெனப் பகருவீரே |