| தாக்கவே நெடீநுதனில் வெண்ணையப்பா தண்மையுடன் மூன்றுநாள் கொடுப்பாயப்பா நாக்கமலம் வுந்தியெனும் படிகந்தன்னில் நலமான குளிகையது வூறியல்லோ தேக்கமது கண்டல்லோ நான்காம்நாளில் திறளான காத்தனது வதிகமாகி நோக்கமுடன் கண்சிவந்து சுரமுண்டாகி நோயதுவும் பிறக்குமது திண்ணம்பாரே |