| ஊற்றான தாளகந்தான் பலத்தைவாங்கி உறுதியாஞ்சுன்னத்தில் சுத்திபண்ணி மாற்றான அயச்சட்டிக்குள்ளேவைத்து மருவவே இலைக்கள்ளிப் பாலுக்குள்ளே நீற்றான துரிசியென்ற சுன்னம்போடு நீறாக முறிந்தபின்பு எடுத்துக்கொண்டு காற்றான தாளகத்தில் சுருக்குப்போட கனமான மெழுகாகும் எடுத்துக்கொள்ளே |