| காண்பானே நாதாக்கள் தாள்பணிந்து கருத்துரவே மனதுவந்து நடந்துகொண்டால் ஆண்பான வாதமது சித்திக்குந்தான் அடவான பெரியோர்கள் கிருபைதன்னால் மாண்பான சிவஞானம் கிட்டும்பாரு மறவாமல் சின்மயத்தை மனதிலுன்னி ஜாண்பாம்பே யானாலும் பிடிவேண்டல்லோ சட்டமுடன் தெருவழியில் நில்லாடீநுதானே |