| பாரேதான் செந்தூரந் தனையெடுத்து பாங்குபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று தீரேதான் தானுருக்கி குருவொன்றீய திறமான மாற்றதுவுங் காணும்பாரு சீரேதான் வோட்டிலிட்டு வூதிப்போடு சிறப்பான மாற்றதுவும் எட்டதாகும் நேரேதான் பத்துக்கோர் தங்கஞ் சேர்க்க நிலையான மாற்றதுவு மாகும்பாரே |