| கொள்ளவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு கொற்றவனே சரக்கதுதான் செப்பக்கேளு விள்ளவே பூரமது வொன்றேயாகும் வித்தகனே வீரமது வொன்றேயாகும் மெள்ளவே சூதமது வொன்றேயாகும் மேன்மையுடன் கெந்தியது வொன்றேயாகும் உள்ளபடி லிங்கமது வொன்றேயாகும் வுத்தமனே கெவுரியது வொன்றுகூட்டே |