| பார்க்கவென்றால் இன்னமொரு கருமானம்பார் பாடுகிறேன் புலிப்பாணி மைந்தாகேளு தீர்க்கமுடன் பேரண்டந் தலையண்டந்தான் திறமான ஓடதுவும் கொண்டுவந்து ஆர்க்கவே வெடியுப்புக் கூடச்சேர்த்து வப்பனே மூலிகையின் செயநீர்தன்னில் ஏர்க்கவே நாற்சாமம் அரைத்துபாலா யெழிலாக வில்லைதட்டி காயவையே |