| ஒன்றான செந்தூர மென்னசொல்வேன் உத்தமனே பத்துக்கு ஒன்றே யீந்து குன்றான செம்பொன்றுங் கூடச்சேர்த்து கொற்றவனே வாரடித்துப் புடத்தைப்போடு வென்றிடவே சொகுசாவின் கடைதானப்பா வித்தகனே சிவவேடம் பூண்டோர்க்கெல்லாம் நன்றான கவசகுண்டலத்துக்காதி நாயகனே என்னசொல்வேன் வதீதம்பாரே |