| அன்றான செந்தூர துந்தபாகம் வப்பனே புடம்பஞ்ச தசமுமாகும் வென்றிடவே புடமதுவும் போட்டுமைந்தா விருப்பமுடன் தானெடுத்து சிமிளில்வைத்து குன்றான மகமேரு செந்தூரத்தை குறிப்புடனே பாச்சுதற்கு வகையைக்கேளிர் தென்றிசையில் பொதிகைமுனி கும்பயோனி செப்பவிலை யிந்தமுறை செப்பார்தாமே |