| தருமமா மகத்தியரும் இந்தபாகம் சட்டமுடன் பூரணத்தில் சொல்லவில்லை கருமமது வழியாமல் மூலிகற்பம் சாங்கமுடன் சொன்னாரே வேரொன்றில்லை திருமகளின் கடாட்சத்தால் காயகற்பம் திட்டமுடன் சொல்லவில்லை பூரணத்தில் குருவான யெனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு நீதியாமே |