| நின்றாரே காலாங்கி நாதர்தம்மால் நீடூழி காலம்வரை யடியேன்தானும் குன்றான அவர்பாதந்தொழுதுமல்லோ குளிகைகொண்டு மலையேறி மலைதான்கண்டேன் சென்றேனே சீனபதிக் கிடபாகத்தில் சிறப்பான தேசமது வனேகமுண்டு வென்றிடவே பலஜாதி மாண்பர்தாமும் விருப்பமுடன் கண்டல்லோ மறிந்திட்டேனே |