| உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல் அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே |