| களிப்பான தெரிசனத்தைப் பெண்களெல்லாம் கருத்துடனே பார்த்தல்லோ சந்தோஷித்து தளிர்போன்ற கரமதனை கண்ணில்வொத்தி சார்புடனே சாயாவின் தரிசனத்தை பளிங்குடனே எங்களுக்கு போதித்தாலே பாங்குடனே தரிசித்து மனங்களித்து அளியாமல் எங்களது காயந்தன்னை வவனியிலே தாமிருக்கச் செடீநுவோம்பாரே |