| பாரேதான் சரநூலாம் பஞ்சாட்சி பாரினிலே மாணாக்கர் பிழைக்கவென்று நேரேதான் சாத்திரத்தைப் பாடிவைத்தார் நீதியுடன் சாயாவின் தரிசனத்தை சேரேதான் தரிசனத்தை காண்பதற்கு செம்மலுடன் வழிசொன்னார் மைதானில்லை கூரேதான் மையினது மார்க்கந்தன்னை கூறினேன் காலாங்கி கடாட்சந்தானே |