| பாரேதான் எந்தனுக்குச் சொன்னமார்க்கம் பாருலகில் யாவருக்குஞ் சொன்னதில்லை நேரேதான் வெகுகால கோடியப்பா நேர்மையுடன் காலாங்கி நாதர்தாமும் தீரேதான் குருபாதங் கார்த்திருந்து தீரமுடன் வாங்கினதோர் வித்தையப்பா சீரேதான் உந்தனுக்கு யானுமல்லோ சிறப்புடனே யோதிவைக்கும் வண்மைகேளே |