| சுடரான வையத்து சித்தனென்பார் சூட்சாதி சூட்சமதைக் கடந்தஞானி அடலான மாண்பரெல்லாம் வணங்கும்ஞானி வவனிதனில் விட்டகுறை யிருந்துதானால் திடமான ஞானியென்று பேர்வகுப்பான் தீர்க்கமுள்ள ஜெகஜால மந்திரவாதி மடலான தத்துவங்கள் தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் தானறிந்த மதியவானே |